பு(து)த்தகம்
நான் ஷர்மி வைரம் (A)
நாவலுக்கு A சர்டிஃபிகேட் கொடுத்தமைக்காகவே எழுத்தாளர் கேபிள் சங்கருக்கு
வாழ்த்துக்கள்
.
சாதாரண வைர கொள்ளை கடத்தல் தான் நாவலின் கரு.ஆனால் அதை மிகவும் ரசிக்கும் படியாய் காமத்தோடு கதையையும் எழுதியிருப்பது தான் மிக சிறப்பு.1998 - 2000 வாக்கில் எப்பொழுதோ கேள்விபட்டிருக்கிறேன் கோவாவில் ஆண் ஐட்டங்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.வெளிநாட்டினரோடு செக்ஸ் வைத்துக் கொண்டு பணமும் மகிழ்ச்சியையும் பெறுவர் என்று.
அவர்களின் பெயர் ஜிகிலோ என்று இன்றைக்குத் தான் அறிந்து கொண்டிருக்கிறேன்.சென்னையில் இதற்கென ஒரு கூட்டமே இயங்கி வருவதை கண்டு மனம் அதிசயமும் ஆச்சர்யமும் அடைகிறது.கேபிள் சங்கர் தன் வசீகர எழுத்தில் இவர்களின் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக எழுதி இருப்பதை பார்க்கும் போது கதை தானே என்று ஒதுக்கி வைக்க முடியவில்லை.
மிகவும் டிடெய்ல்டு ஆன நாவல்.கதையும் விறுவிறுப்பாகவே செல்கிறது.
நான் என்கிற ராஜன், ஷர்மி என்கிற பெண், வைரம் என்கிற ஆள் அல்லது வைரக் கடத்தலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.மூவரையும் தனித்தனியாய் விவரித்துக் கொண்டு ஒற்றைப் புள்ளியில் இணைத்து பின் கதையை ஆச்சர்யத்தோடு முடிப்பது ஒரு திரைப்படத்தை பார்த்த மாதிரி இருக்கிறது.
பணக்கார பெண்களின் லைஃப்ஸ்டைல், அவர்களின் மறுபக்கம் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.சரோஜாதேவி புக் கொஞ்சம் அப்பட்டமாய் இருக்கும்.
ஆனால் இதில் பூசி மெழுகப் பட்டிருக்கிறது.படிக்க ஒன்றும் விரசமாய் தெரிவதில்லை அதான் இந்த நாவலின் சிறப்பம்சம்.காதல் காமம் துரோகம் என எல்லாம் கலந்து கட்டி, படிக்க படிக்க மிக சுவாரஸ்யத்தை தந்திருக்கிறார் எழுத்தாளர்.புத்தகத்தை படிக்க ஆரம்பித்து முழுவதும் முடிக்கும் வரை பல ஆச்சர்யங்களை தந்து கொண்டே இருக்கிறது.செம இண்டரஸ்டிங்.
Post a Comment
No comments:
Post a Comment