எழுத்தாளர் ஷான் கருப்பசாமியின் விமர்சனம் # 24 சலனங்களில் எண் # கேபிள் சங்கர் எழுதிய '24 சலனங்களின் எண்' சினிமாத் துறை குறித்த பல நுணுக்கமான தகவல்களைக் கொண்டிருக்கிறது. இரண்டு படங்கள் உருவாகின்றன. பல படங்களில் அசோசியேட்டாக அனுபவம் வாய்ந்த ஒருவரும் வளர்ந்து வரும் இயக்குநர் ஒருவரும் ஒரே நாயகனை வைத்துப் படம் தொடங்குகிறார்கள். அந்த இரு படங்களின் தயாரிப்பும் வெளியீடும்தான் நாவல். தனது துறை சார்ந்த நாவல் என்பதால் நாவலாசிரியருக்குப் பல சம்பவங்களைத் துல்லியமாக எழுத வாய்த்திருக்கிறது. அவரே நேரில் பார்த்த உணர்ந்த பல விஷயங்களைத்தான் நூலில் எழுதியிருக்கிறார். துறை சார்ந்த சிலரிடம் சமீப காலங்களில் பரிச்சயம் இருப்பதால் என்னாலும் பல இடங்களைப் பொருத்திப் பார்க்க முடிந்தது. தமிழ் சினிமா உருவாகும் விதமானது கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் பெரிதும் மாறியிருக்கிறது. இதற்கு முன்பிருந்த புத்தகங்கள் ஸ்டுடியோக்கள், தயாரிப்பு நிறுவனங்கள் கோலோச்சிய காலகட்டத்தின் தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசுபவையாக இருக்கலாம். ஆனால் தற்காலத் தமிழ்த் திரையுலகைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. ஒரு சினிமா உருவாக 24 கலைகள் ஒன்...