நான் ஷர்மி வைரம். விமர்சனம் #4 எனது பார்வை புதினம்: நான் ஷார்மி வைரம் (A) எழுத்தாளர்: கேபிள் சங்கர் ( எ) Cable Sankar விலை: ரூபாய். 200/- Kindle: https://www.amazon.in/dp/B07WNCTQF6 டிஸ்கி:. எழுத்தாளரே கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு என்பதை உணர்த்த தலைப்பை விட பெரிய (A) சான்றிதழ் தந்துள்ளார். அதனால் கலாச்சார போராளிகள் வேறு இடம் பார்க்கவும். நண்பர் கேபிள் சங்கர் - வியாபாரம், எழுத்தாளர், விநியோகிஸ்தர், விமர்சகர், இயக்குனர் என்ற பன்முகம் உள்ளவர். வலைதளத்தின் (blog) தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமான நபர். இவரின் எழுத்துப்பாணியை அவர் மானசீக குருவாக மதிக்கும் எழுத்தாளர் சுஜாதாவைப் போல ஒரு பாணியில் வகைப்படுத்த முடியாது. இவரின் இந்த கதை - இலக்கிய வகையை சார்ந்ததா என்ற கேள்விக்கு நமது பதில் - ஆம், இது வெகுஜன இலக்கியம். இந்த கதை, பாலியல் களத்தை பின்புலமாகக் கொண்டது. சந்தர்ப்ப சூழ்நிலையால் விலைமகனாகும் ஒருவன் - ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தினால் விலைமகளாகும் ஒருத்தியின் மேல் காதல் கொள்ள , அதை வைரம் என்ற சூது கவ்வ - துரோகம், குரோதம், கொள்ளை , விளைவு - என ஒரு அசத்தல் புதினம். முதலில் எழுத்தாளருக...