#பெர்முடா விமர்சனம்#5
ரமணா படத்துக்கு ஏன் விஜய்காந்தை தேர்ந்தெடுத்திங்கங்கன்னு முருகதாசை கேட்டப்ப "கிளைமாக்ஸ்ல எல்லா ஸ்டூடன்ட்ஸயும் பாத்து மெசேஜ் சொல்ற மாதிரி ஒரு சீன், அதை சொல்ல சில நடிகர்களுக்கு மட்டும்தான் மாஸ் இருக்கு, கேப்டன் அதுல முக்கியமானவர். அந்த சீனுக்காகத்தான் அவரை முடிவு பன்னேன்" னு சொல்லிருப்பார்.
ஒரு வசனத்தை யார் சொன்னா நல்லாருக்கும்ங்கற மாதிரிதான், சில கதைகளையும் சிலர் சொன்னாதான் நல்லாருக்கும். சிலரால மட்டும்தான் அந்த கதைகளை சொல்லவே முடியும்.
பெர்முடா முக்கோணத்தை பத்தி கேள்விப்பட்டுருப்போம். பக்கத்துல போன எவனுமே தப்பிக்க முடியாது, உள்ள இழுத்துரும். காரணமே புரியாம காணாம போனவங்க அதிகம். அதே மாதிரி ஆம்பளைங்க தொலைஞ்சு போற இன்னொரு முக்கோணம் இருக்கு. அதுக்கும் பெர்முடாவுக்கும் கூட சம்பந்தமிருக்கு.
சரி கதைக்கு வருவோம். களம்னு பார்த்தா பொருந்தா காமம்.
அறுபது வயசு வரைக்கும் பொண்டாட்டி தமயந்தி பேச்சை தட்டாம காதலையோ காமத்தையோ வகையா அனுபவிக்காத சாம்பசிவராவ் வாழ்க்கைல எதிர்பாராத விதமாக அவர் இத்தனை நாள் தவறவிட்டதெல்லாம் கிடைக்க ஆரம்பிக்குது
பொண்டாட்டிக்கு உடம்பு சரியல்லாம இருக்கற சூழ்நிலைல தன்னோட நீட் கோச்சிங் செண்டர்ல படிக்க வர திவ்யா கூட அம்பது வயசு ராமசுப்புக்கு தொடர்பு ஏற்படுது
தமிழ் சினிமால உச்சத்துல இருக்க இயக்குனர் சுரேஷ்வர்க்கு அறிவும் திறமையும் இருக்க நித்யாங்கற இளமையான பொண்ணோட நட்பு கிடைக்குது.
இந்த மூணு கதைகள்லயும் பொதுவான விசயம்னா ஆணுக்கு வயசு அதிகம். பெண்ணுக்கு பாதிக்கும் கீழ. அவங்க மூணு பேர் வாழ்க்கைலயும் பெண்கள் வராங்கங்கற மாதிரி தோணும். ஆனா பெண்களாத்தான் விரும்பி அதை செயல்படுத்துவாங்க.
ஆம்பளைங்கறவன் வெறும் அட்டைக்கத்தித்தான். அவன் என்ன செய்யனும்னு முடிவு பன்றது ஏதோ ஒரே விதத்தில் ஒரு பெண்ணாதான் இருக்க முடியும். அதிகமாக அதுல காமம் பெரும்பங்கு வகிக்கும்.
நிஜமா Cable Sankarக்கு எங்கே இருந்து இந்த மாதிரி கதைகள் கிடைக்குது? உண்மையிலேயே பார்ல உக்காந்து இத்தனையும் சொல்லுவாங்களா? இந்த மாதிரி மெடிக்கல் சீட்டுக்காக இல்லை இன்ஜினியரிங் சீட்டுக்காக தன்னை கொடுத்த பெண்ணை பாத்துருக்கேங்கறதால எனக்கு இது யதார்த்தமாதான் பட்டுச்சு.
வழக்கம்போல சுரேஷ்வர்-நித்யா போர்ஷன் செம. அது மாதிரி ராயலா கொஞ்ச நாளாவது அனுபவிச்சுடனும்.
என்ன சொல்ல? சங்கரோட கதைகளை படிக்க கொஞ்சமாவது நடப்புலகத்துல இருக்கனும், இல்லைன்னா இப்படில்லாம் எங்காவது நடக்குமான்னுதான் கேள்வியெழும்.
பொண்டாட்டி நாவலை எப்படி எல்லா பெண்களும் படிக்கனும்னு சொல்றனோ அது மாதிரி பெர்முடா நாவலை எல்லா ஆண்களும் கட்டாயம் படிக்கனும்
நன்றி Kathir Rath
Bermuda Kindle link https://amzn.to/3mQCgxA
Bermuda Book Link: https://amzn.to/3lRilx0
Post a Comment
No comments:
Post a Comment