Asst புராணம் -2
அஸிஸ்டெண்ட் புராணம் -2 ”நான் ஒரு ஷார்ட் பிலிம் பண்ணியிருக்கேன். அதைப் பார்த்துட்டு சொல்லுங்க” என்ற்படி, 2013 ஆம் ஆண்டு வாக்கில் மிக ஒல்லியான உருவத்தோடு 25 வயது இளைஞன் ஒருவன் என்னை வந்து அணுகினான். படத்தைப் பார்த்தேன். மிகச் சுமார் லெவலுக்கும் கீழே இருந்தது அந்த வீடியோ. ஆனால் அவனிடம் ஒரு கருத்தை சொல்லவிழையும் ஆர்வம் இருந்தது அந்த படத்தில் தெரிந்தது. படத்தில் இருந்த நிறை குறைகளை எடுத்து சொன்னேன். முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் முழுவதுமாய் கேட்டு முடித்தான். “என்ன பண்ணிட்டிருக்க? எந்த ஊரு?” “ஊரு திருச்சி சார். எம்.பி.ஏ படிச்சிருக்கேன். ஒரு தங்கச்சி. அப்பா, அம்மா இருக்காங்க. ஒரு காலேஜுல வேலை செய்யுறேன். மாசம் 10 ஆயிரம் சம்பளம். எனக்கு சினிமால டைரக்டர ஆகணும். என்னால வேலை செய்ய முடியலை. என் நினைப்பு பூராவும் சினிமாவுலேயே இருக்கு. வேலைய ரிசைன் பண்ணிட்டு சினிமாவுல இறங்கலாமானு குழப்பமாவே இருக்கு. என்னை உங்க கிட்ட அஸிஸ்டெண்டா சேர்த்துக்கிறீங்களா? “ என்ற அவன் குரலில் ஆர்வமும், மரியாதையும் பொங்கி வழிந்தது. வழக்கமாய் இப்படி பேசுகிறவர்களிடம் ஒரு போலித்தனமான மாடுலேஷன் இ...