சாப்பாட்டுக்கடை - அப்புகுட்டி வெரைட்டி ரைஸ் - சாலிகிராமம்
கொரோனா எத்தனை விதமான அழிவை கொடுத்ததோ அதே அளவிற்கு புதிய நம்பிக்கைகளையும் கொடுத்துவிட்டுத்தான் போயிருக்கிறது. அதில் முக்கியமான சர்வைவல் நம்பிக்கை புதிய, சிறிய உணவகங்கள். கொரோனா காலங்களில் ஏகப்பட்ட சிறு, குறும் உணவங்கள், முக்கியமாய் பார்சல் மட்டுமே இருந்த காலத்தில் வருமானமில்லாமல் கஷ்டப்பட்ட ஏழை, நடுத்தர குடும்பங்கள் உணவு தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். நிறைய சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் உணவு பிஸினெஸ் ஆரம்பித்து வெற்றி நடை போடுவதை கண் கூடாக பார்க்கிறேன். நொந்து நூலாகிப் போனவர்களையும் பார்க்கிறேன். இந்தக்கடை கொரானா காலத்தில் மிகப் பிரபலமாய் பேசப்பட்டது. குறிப்பாய் உதவி இயக்குனர்களுக்கு வருமானமில்லாத காலத்தில் அம்மா உணவகமும், கைவிட்ட நிலையில் சகாய விலையில் நல்ல தரமான உணவு கிடைத்தால் அதை விட வேறு என்ன வேண்டும்?. சாலிகிராமம். அருணாசலம் ரோடு. ப்ரசாத் ஸ்டூடியோ வாசலில் ஒரு குட்டி யானை வண்டியில் இவர்களது விற்பனை ஆரம்பமானது. கொரோனா காலம் இவர்களை பிரபலப்படுத்தியது. முப்பது ரூபாய்க்கு நல்ல எலுமிச்சை புளிப்போடு சிக்கன் தொக்கு, முட்டை தொக்கு தருகிறார்கள் என்று கேள்விப்பட்டு பார்சல் வாங்கி வந்...