சாப்பாட்டுக்கடை - மவுண்ட்பேட்டன் ஐயர் கேட்டரிங்
மார்கழி மாசம் வந்துவிட்டாலே எல்லா சபாக்களிலும் கச்சேரி களைகட்ட ஆரம்பித்துவிடும். கூடவே கச்சேரி நடக்கும் இடத்தில் கேட்டரிங் ஆட்களின் கேண்டீனும் ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு கச்சேரி முடிந்ததும் அங்கே இருக்கும் கேட்டீனில் மதிய சாப்பாடு, மாலை டிபன், இரவு உணவு என களை கட்டிவிடும். கச்சேரிக்கு போகிறவர்களை விட கேண்டீனில் நிறைய கூட்டம் என்பதை சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். இதில் மவுண்ட்பேட்டன், அறுசுவை என பல பேர் பிரபல்யம். ஒவ்வொரு மார்கழி மாத சீசனுக்கும் ஏதாவது புதிய ஐயிட்டத்த இறக்கி கேண்டீன் வியாபாரத்தை களை கட்ட வைத்துவிடுவார்கள் இவர்கள். வருடா வருடம் நானும் பல கேண்டீன்களுக்கு படையெடுத்திருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் எழுத நினைத்ததில்லை. இன்றைய புட் ப்ளாகர்களுக்கு வேற லெவல் விமர்சகர்களைத் தாண்டி வெறும் வெஜிட்டேரியனில் இத்தனை வகைகளா? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இவர்களது அயிட்டங்கள வரிசைக்கட்டி இருக்கும். மியூசிக் அக்காடமியில் கேண்டீனுக்கு போய்ப் பார்க்கலாம் என்று போன போது அங்கே உள்ளே நுழையும் போதே கேண்டீனுக்கு மட்டுமென்றால் பார்க்கிங் இல்லை என்று போர்டே வைத்திருந்தார்கள். சரி என ...