Posts

Showing posts from March, 2022

பேன் இந்திய படங்களால் அழியப் போகும் தெலுங்கு சினிமாவின் எதிர்காலம்.

தெலுங்குல எல்லாம் பாருங்க எப்படி இருக்காங்க ஹீரோக்கள் எல்லாம் . படம் ஓடலைன்னா காசைக் கூட திரும்பக் கொடுத்துடுறாங்க . கணக்கு வழக்கு எல்லாம் சரியா கொடுத்துருவாங்க . அதை விட முக்கியம் டிக்கெட் ப்ரைஸ் . ஹைதராபாத்துல 80 ரூபாய்க்கு புதுப்படம் பாக்கலாம் . அங்க பார்க்கிங் கிடையாது . ஸ்நாக்ஸுக்கு எம் . ஆர் . பி ரேட் தான் ” இப்படி நாலு பக்கத்துக்கு அக்கட தேச சினிமாவைப் பற்றி புகழ்ந்து கொண்ட்டிருந்தவர்கள் எல்லாம் விரைவில் நம்மூரைப் போல புலம்ப ஆரம்பிக்க போகிறார்கள் . அப்படி என்ன நடக்கப் போகிறது ? என்பவர்களுக்குத்தான் இந்த கட்டுரையே . சில பல வருடங்களுக்கு முன் மகதீரா என்கிற படம் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் வளர்ந்து வந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படம் . மிகப் பெரிய ஹிட் . இங்கே தமிழில் தாணு அவர்கள் டப் செய்து வெளிடப் போவதால் நேரடி தெலுங்கு பதிப்பு தமிழ் நாட்டில் கிடையாது என்று முடிவாகிவிட்டதால் , நானும் என் நண்பர்களும் நகரி போய் படம் பார்ப்பது என்று முடிவெடுத்து போய் பார்த்தோம் . படம் வந்து கிட்டத்தட்ட இருபது...