ஞான் ஸ்க்ரீன்ப்ளே ரைட்டர்
ஞான் ஸ்க்ரீன்ப்ளே ரைட்டர் “ சார் .. நம்ம ஆபீஸுக்கு டீ கொடுக்க ஒரு பையன் வருவான் . அவன் உங்களை மீட் பண்ணணுமாம் ?” என்றார் அலுவலக ஊழியர் . “ என்னவாம் ?” “ ரெண்டு நாள் முன்னாடி வந்து இங்க சினிமா சம்பந்தமா ஏதாச்சும் பண்ணுறீங்களானு ? கேட்டாரு . ஆமான்னே . அவரு ஒரு ஸ்க்ரீன் ப்ளே ரைட்டராம் அவராண்ட ரெண்டு மூணு கதை இருக்காம் அது பத்தி உங்களோட பேசணும்னு சொன்னாரு .. நேத்து டீ கொடுத்துட்டு கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணாரு . நீஙக் மீட்டிங்குல இருந்தீஙக் .. அதான் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு வைக்கச் சொன்னாரு .. நாளைக்கு காலையில வரச் சொல்லட்டுமா ?” திறமை எங்கே வேண்டுமானாலும் இருக்கும் அதை கண்டுபிடிப்பதுதான் நல்ல கலைஞனின் கடமை என்று யாரோ சொன்னது நியாபகம் வந்தது .“ சரி நாளைக்கு காலையில வரச் சொல்லுங்க ” என்றிருந்தேன் . அடுத்த நாள் மதியமாய் வந்தான் . “ உங்க பேர் ?” சொன்னான் . “ சொல்லுங்க தம்பி ” என்றேன் . “ சார் நான் ஸ்க்ரீன் ப்ளே எல்லாம் எழுதுவேன் . ரெண்டு கதை எழுதி வச்சிருக்கேன் . த்ரில் கதை . உங்களுக்கு ஏதாச்சும் வேணுமா ?” ...