Posts

Showing posts from September, 2022

சாப்பட்டுக்கடை - மன்னா மெஸ்

Image
சாப்பாட்டுக்கடை - மன்னா மெஸ் இந்தக்கடையைப் பற்றி பல பேர் சொல்லியிருக்கிறார்கள் . இக்கடையின் ஓனர் ஜெயராஜ் அவ்வப் போது பேஸ்புக்கில் விருந்தினர்களுடன் படமெடுத்து போட்டிருப்பார் . பெரும்பாலும் பயணங்களில் அசைவத்தை பலரும் தவிர்க்கவே நினைப்பார்கள் . முக்கியமாய் காரம் , மசாலா காரணங்களால் வயிறு பிரச்சனை கொடுக்க வாய்ப்புண்டு என்பதாலேயே தவிர்த்து விடுவார்கள் . சென்னையிலிருந்து 99 கிலோமீட்டரில் 99 கிலோ மீட்டர் எனும் உணவகத்தை நடத்து மனோவின் உணவகம் ஆரம்பித்ததிலிருந்து வெளியூர் போகும் போதெல்லாம் சாப்பிட்டிருக்கிறேன் . அற்புதமான , தரமான சைவ உணவு வேண்டுமென்றால் நிச்சயம் இவர்களைத்தான் ரெகமெண்ட் செய்வேன் . இந்த மன்னா மெஸ் மட்டும் நம் லிஸ்டில் எஸ்கேப் ஆகிக் கொண்டேயிருந்தது . காரணம் பெரும்பாலும் காலை உணவு நேரத்திலேயே அந்த ஏரியாவை க்ராஸ் செய்வதாலும் , அத்தனைக் காலையில் அசைவம் சாப்பிட வேண்டாமே என்கிற யோசனையாலும் தவிர்த்துக் கொண்டிருந்தேன் .  இம்முறை சரியாய் மதியம் தான் பாண்டிச்சேரிக்கு கிளம்பினோம் . கிளம்பும் போதே ஈ . சி . ஆர...