சாப்பாட்டுக்கடை - ஆற்காடு மெஸ்- தோற்ற கதை.
பல சாப்பாட்டுக்கடைகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். 40-50 வருட பாரம்பரியம் உள்ள கடைகள் முதற் கொண்டு, புதியதாய் ஆரம்பித்திருக்கும் கடைகள் வரை எழுதியிருக்கிறேன். ஆனால் மூடிய கடையைப் பற்றி இதுவரை எழுதியதில்லை. மூடியதை பற்றி எழுதி என்ன பிரயோஜனம்?. பல வருட பாரம்பரியம் உள்ள கடைகள் கால மாற்றத்தில் தக்க வைக்க முடியாமல் மூடியதில்லையா?. இதில் எழுத என்ன இருக்கிறது என்று கேட்கலாம். மொக்கையான சின்னக்கடைகளை எல்லாம் வேற லெவல் கடை என்று வீடியோ போட்டு ப்ரோமோட் செய்யும் காலத்தில் எந்த விதமான ப்ரோமோஷனும் இல்லாமல் முப்பது வருடங்களுக்கு மேலாய் பூந்தமல்லி ரோட்டில், அமைந்தக்கரை முரளிகிருஷ்ணா தியேட்டருக்கு திரும்பும் இடத்தில், ஒரு பழைய பில்டிங்கில் இருந்த கடை தான் இந்த ஆற்காடு மெஸ். மதிய சாப்பாடு இங்கே மிகப் பிரபலம். குறிப்பாய் எறா தொக்கு, சிக்கன், மட்டன் குழம்புகள் அட்டகாசமாய் இருக்கும். இன்றைக்கு எல்லா நான்வெஜ் கடைகளிலும் கருவாட்டுக்குழம்போ, தொக்கோ இல்லாமல் இருப்பது இல்லை. ஆனால் அப்போது எல்லாம் கருவாட்டுக் குழம்பு எல்லா கடைகளிலும் கிடைக்காது. இவர்கள் கடையில் ஞாயிறு ஸ்பெஷல். அதை சாப்பிடுவதற்காக ஒரு பெரிய க...