சாப்பாட்டுக்கடை- ஆர்.ஆர் மெஸ் கோவை
கோவையில் எப்போது போனாலும் ஒரு முறையாவது வளர்மதி மெஸ்ஸில் சாப்பிட்டு விடுவேன். இம்முறை மிகவும் டைட்டான ஷெட்டியூலில் போயிருந்ததால் போக முடியவில்லை. வேலை வேறு கிடைத்த இடத்தில் சாப்பிட்டு விட்டு விடுவோம் என்று தோன்றியதால் காலை டிபனை தங்கிய ஓட்டலிலேயே முடித்துவிட்டு, மதியம் நிகழ்வில் போடப்பட்ட சாப்பாட்டை சாப்பிட உட்கார்ந்தேன். நான் வெஜ் சாப்பிடும் ஆசையில் இருந்தவனுக்கு வெஜ் பிரியாணி, குருமா, தயிர் பச்சடி, தயிர் சாதம், கத்திரிக்காய் காரக்குழம்பு. கத்திரிக்காய் காரக் குழம்பின் கலர், மேல் மிதந்த எண்ணெய் கத்திரிக்காயும் கமான், கமான் என்று அழைத்தது. வெஜ் பிரியாணி தரமாக இருக்க, கொடுக்கப்பட்ட வெஜ் குருமா மட்டும் கொஞ்சம் தண்ணீராய் இருந்தது. கடைசியாய் தயிர்சாதத்தை போட்டுக் கொண்டு அந்த கத்திரிக்காய் குழம்பை ஊற்றிக் கொண்டேன். அவ்வளவாய் காரமில்லாமல், நல்லெண்ணெய் மிதக்கும் கத்திரிக்காய். தயிர் சாதத்தோடு அட்டகாசமாய் இருக்க, யாருப்பா இந்த சப்ளையர்? என்று கேட்ட மாத்திரத்தில் அங்கே நிகழ்விற்கு வந்திருந்த நண்பர் செல்வா நம்முளுதுதான் சார் என்றார். அவரின் கடை பெயர் ஆர்.ஆர். மெஸ் என்றதும் நான்வெஜ் போடுறீங்...