சாப்பாட்டுக்கடை - உபவிஹார் - அண்ணாநகர்
பென்ன தோசை சாப்பிடுவதற்காக கோவா செல்லும் வழியில் ஓர் ஊரில் இரவு தங்கி, விடியற்காலையில் அந்த ஊர் பென்ன தோசைக்கு பேமஸ் என்பதால் முதல் தோசையை சாப்பிட்டு கிளம்பிவர்கள் நாங்கள். அப்படியான பென்னை தோசை சென்னையில் கிடைக்கிறது என்று கேள்விப்பட்ட போது கண்களில் அந்த செந்நிறமாய் மடிக்கப்பட்ட தோசை கண் முன் நிழலாடியது. கர்நாடக பென்னை தோசைக்கு உள்ளே வைத்துத் தரும் மசால் இன்னொரு சுவாரஸ்யம் என்றாலும் தோசையின் மேல் வெண்ணையை வைத்து அது உருகிய பின் பிய்த்து சாப்பிடும் சுவை இருக்கிறதே அட அட அட.. அப்படியான ஒரு தோசை சென்னையில் கிடைக்கும் இடம் எது என்று தேடியதில் பெங்களூர் டிபன் செண்டர் என்று ஒன்றைப் பார்த்தோம் படு திராபையான உணவு. கூடவே தண்ணி பாட்டில் வாங்க சொல்லி திட்டு வாங்கிக் கொண்டார்கள். தொடர் தேடல் புதிதாய் ஒரு கடை அண்ணாநகரில் திறந்திருக்கிறார்கள் என்றதும் வண்டியை விட்டோம் அண்ணாநகர் டவர் பார்க் மெட்ரோ பார்க்கிங்கில் தான் கடை ஆரம்பித்திருக்கிறார்கள். சின்னக் கடை தான். ஏகப்பட்ட கூட்டம். டிபிக்கல் கர்நாடக அயிட்டங்களை வகைப்படுத்தியிருந்தார்கள். தட்டே இட்லி, கார பாத், பிஸிபேளா பாத், பூரி, பென்னே த...