சாப்பாட்டுக்கடை - ரமேஸ்வரம் கஃபே - பெங்களூரு
சமீபகாலமாய் எந்த ரீல்ஸ், ஷார்ட்சை திறந்தாலும் இந்த ராமேஸ்வரம் கஃபேயை பற்றிய வீடியோ தவறாமல் இருக்கும். அதுவும் ஒரு நாளைக்கு 5 லட்சம் பில் போடும் கடை. பெரிய க்யூ நிற்கும் கடை என்றெல்லாம் வீடியோ அவர்கள் வீடியோவில் காட்டும் செந்நிற தோசை. மசாலா, இட்லி சாம்பார் எல்லாவற்றையும் பார்க்கும் போது வழக்கமான வேற லெவல் ஓட்டலை ஏத்திவிட்டு பிஸியாக்கிட்டாங்களோ என்கிற சந்தேகம் எனக்கு வராமல் இல்லை. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் போய் தான் பார்த்துவிடுவோமே என்று தேடிய போது பெங்களூருவில் மூன்று இடங்களில் இருந்தது. நாங்கள் ஜே.பி.நகர் பிராஞ்சுக்கு ஆட்டோ பண்ணிட்டு போனோம். ஆட்டோவெல்லாம் வச்சி சாப்பிடணுமா ஜி என்று உடன் வந்த நண்பர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டே வந்தார். எடுத்த குறிக்கோளில் கொஞ்சமும் வழுவாமல் போய் சேர்ந்த போது அத்தனை க்யூவெல்லாம் இல்லை. ஆனால் செம்ம கூட்டம். ஆனால் அது அங்கே தெரியாத வண்ணம் இடத்தை செட் செய்திருந்தார்கள். இத்தனைக்கும் மக்கள் நடமாட்டம் இருக்கும் இடம் தான். தனியாய் வேலட் பார்க்கிங். ஓப்பன் கிச்சன். ஆங்காங்கே சாப்பிட வைக்கப்பட்டிருந்த டேபிள்கள். கோயில் தாழ்வாரம் போல உட்கார்ந்...