இந்தக் கட்டுரை வீடியோ போடுவதற்காகப் போய் ஷூட் செய்துவிட்டு, வேற லெவல், சூப்பர் என்று எழுதப்பட்டது அல்ல.
மெஸ்கள் புகழ் பெற ஆரம்பித்தவுடன் யார் உணவகம் ஆரம்பித்தாலும் கூடவே மெஸ் என்று போட்டுக் கொள்ளும் பழக்கம் உருவாக ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. மெஸ் என்பது சுவையில் தனித்தன்மையுடன், பெரிய லக்ஷரியாய் இல்லாமல், மிக நியாயமான விலையில் இருப்பது. அனால் மெஸ் என்று வைத்துக் கொண்டு 5 ஸ்டார் ஓட்டல் ரேட்டை வைத்துக் கொண்டு கல்லா கட்டிக் கொண்ட்டிருக்கும் காலத்தில் புதியதாய் வளையம்பட்டியான் மெஸ். அதுவும் மெஸ்களின் தலைமயிடமான திருவல்லிக்கேணியில் நண்பர் ஆசிப் ஆரம்பிக்கப் போவதாய் சொன்னவுடன் ஆச்சர்யமாய்த்தான் இருந்தது.
முதல் நாள் போன போது ஏகப்பட்ட கூட்டம் விருந்தினர்கள் பல பேர் வந்திருந்தார்கள். நிறைய அயிட்டங்களை வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் அத்தனை கூட்டத்திலும் எனக்கு மிகவும் பிடித்தது தலைக்கறியும், அதன் குழம்பும், கூடவே குடல் குழம்பை அத்தனை சுவையாய் கொடுத்திருந்தார்கள். செஃப் ஹரி நாமக்கல்காரர். ஆரம்பித்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
மதிய சாப்பாட்டு தினமும், மட்டன், சிக்கன், மீன் குழம்பு, தலைக்கறி குழம்பு, ரசம், தயிர் மற்றும் பொரியல் வகைகளுடன் ஆரம்பித்தது. நல்ல அரிசி, மட்டன் குழம்பு அதிக மசாலா இல்லாமல், நன்கு வெந்த மட்டனின் வாசத்துடன் கெட்டியாய் கொடுத்தார்கள். சிக்கன் குழம்பும் அதே போலத்தான். இதில் அதிர வைத்தது தலைக்கறி குழம்பு. இதுவரை சாப்பிடாதவர்கள் மிஸ் செய்யாதீர்கள். அட்டகாசமான சுவை.. காரம், மணம், சுவை எல்லாமே சரியான அளவில் டிவைன். மீன் குழம்பும் அதே போலத்தான் அதிகமான கவிச்சி வாடையில்லாமல் அளவான புளிப்புடன், காரத்துடனும் இருந்தது. கடைசியாய் கெட்டித்தயிர் ஒரு சின்ன சட்டியில் தருகிறார்கள். மொத்த அளவில்லா சாப்பாடு வெறும் 120 ரூபாய்தான்.
அடுத்து இவர்களின் ஸ்பெஷாலிட்டி சைட் டிஷ்கள். குறிப்பாய், மட்டன் சுக்கா. சின்ன பீஸ்களாய் நன்கு வெந்த மட்டன். பெப்பர் தூக்கலாய் அட்டகாசமாய் இருந்தது அடுத்து சிக்கன் பிச்சிப் போட்டது என்று ஒரு தருகிறார்கள். ஆனால் இவர்களில் வைத்திருக்கும் பெயர் சிக்கன் ஸ்ப்ரே.. ஒரு முழு பீஸ் கோழியை நன்கு மேரினேட் செய்து வைத்துவிட்டு, அதை கேட்கும் போது பிய்த்துப் போட்டு, நல்ல கிரிஸ்பாய் அதில் லேசாய் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை கலந்து நல்ல மனத்துடன் தருகிறார்கள். அட்டகாசமான சைட்டிஷ்.
சிக்கன் சிந்தாமணி. அண்ட் பள்ளிப்பாளையம் ஆஸ் யூஷுவல் குறை நிறையென ஏதுமில்லை. சிந்தாமணி சின்னச் சின்னத் துண்டுகள் நன்கு மேரினேட் செய்யப்பட்டதினால் அதன் மசாலா நன்கு உள்ளே போய் கூடுதல் சுவையை கொடுத்தது.
போட்டி. பெரும்பாலும் பல ஹோட்டல்களில் போட்டியை அவாய்ட் செய்துவிடுவேன். ஏனென்றால் அதை ஒழுங்காய் க்ளீன் செய்து சமைக்க மாட்டார்கள் என்கிற எண்ணம். ஆனால் இவர்களின் போட்டி செம்ம. அதுவும் லேசாய் க்ரீமியாய் தருகிறார்கள். போட்டி ரசிகர்கள் அதை ஒரு சின்ன கவளம் சோற்றில் போட்டு சாப்பிட்டுப்பாருங்கள்.
மட்டன் சுக்கா, நுரையீரல், சுவரொட்ட்டி எல்லாம் இவர்களின் ஸ்பெஷல் அயிட்டஙக்ள். சுவரொட்ட்டிக்க்கு முன்பே சொல்லி வைத்தால் தான் கிடைக்கும். மீன் வகைகளில் வச்சிரம், கனவாய் எல்லாம் வைத்திருக்கிறார்கள். பாண்டிச்சேரி ஒயின்ஸ் ஷாப்பில் கொடுக்கும் கனவாய்க்கு ஈடாய் வேறு எங்கும் சாப்பிட்டதில்லை. இங்கு அதே டேஸ்டில். எறா தொக்கும் ப்ரையும் மிகச் சிறப்பு. குறிப்பாய் குண்டு குண்டாய் எறாவை போடாமல் இருந்தது மிகவும் நன்றாய் இருந்தது.
இரவு நேரத்தில் மட்டன், சிக்கன் மற்றும் எறா தோசை வெறும் முட்டையையும், மசாலாவையும் போட்டு ஆங்காங்கே சிதறவிடப்பட்ட பீஸ்களூடன் இல்லாமல் நன்கு வெந்த பீஸ்களூடன், நல்ல தடிமனான பீஸா போல வெங்காயம் மசாலா, மற்றும் முட்டையோடு அருமையான சுவை. கூடவே கெட்டிக் குழம்பு, மட்டன் தலைக்கறி க்ரேவி, மற்றும் சிக்கன் க்ரேவியோடு, மற்றும் சட்னியும் இருக்கிறது.
நண்டு ஆம்லெட், எறா ஆம்லெட், என விதவிதமான கடல்வாழ் உயிரினங்களை ஆம்லெட் போட்டுத் தருகிறார்கள். கிட்டத்தட்ட தோசையைப் போல இருக்கிறது. கொஞ்சம் ஆம்லெட் தனமாய் இல்லாமல் கல் தோசைப் போல இருப்பதால் அத்தனை பாராட்டை தர முடியவில்லை. அதே போல இவர்களது ஞாயிறு ஸ்பெஷலான நாட்டுக்கோழி சீரக சம்பா பிரியாணி. சீரக சம்பா பிரியாணியின் வாசம் அருமையாய் இருந்தாலும், மசாலா அத்தனை சிறப்பாய் இல்லாததால் ரொம்பவே ப்ளண்டாக இருந்தது. குறைகளை அவர்களிடமும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். நண்பர்கள் சில இங்கேயிருந்து ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு நேரிடையாய் அங்கேயே போய் சாப்பிடும் அளவுக்கு ரசிகர்களாகிவிட்டார்கள்.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் மெயின் டிஷ்ஷிலிருந்து சைட் டிஷ் வரை எல்லாமே 120-200 ரூபாக்குள் தான். நிஜமான மெஸ் தரம் மற்றும் விலையுடன். நீங்களும் டிரை பண்ணிப்பாருங்க.
வளையம்பட்டியார் மெஸ்
அக்பர் தெரு
திருவல்லிக்கேணி
Post a Comment
No comments:
Post a Comment