சாப்பாட்டுக்கடை - கைமணம்
கொரோனா காலத்தில் ஏகப்பட்ட க்ளவுட் கிச்சன்கள் முளைக்க ஆரம்பித்திருந்தது. அவைகளில் 80 சதவிகிதத்திற்கு மேலாய் இப்போது இல்லை. ஒரு சில க்ளவுட் கிச்சன்கள் சின்ன ரெஸ்டாரண்டாகவும் மாறியிருக்கிறது. சிலது இன்னமும் க்ளவுட் கிச்சனாகவே இருக்கிறது. அப்படியான ஒரு கொரோனா காலத்தில் நான் கண்டெடுத்ததுதான் இந்த கை மணம் உணவகம். ஒரு நாள் மதியம் கோபாலபுரம் பக்கம் போய்க் கொண்டிருந்த போது கொலைப் பசி. கைமணம் என்று பெயரைப் பார்த்ததும் அது ஒரு சின்ன சந்தாய் இருந்தது. அங்கே ஒரு ப்ளாட்டின் மாடியில் இருப்பதாய் தெரிய மேலேறிப் போய் பார்த்த போது அங்கே ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகைப் போட்டு சமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணியும் ஒரு சில சமையல்காரர்களும் இருக்க, சாப்பிட இடம் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்த போது "சார் இது க்ளவுட் கிச்சன் தான் நோ டைனிங்" என்றார் பெண்மணி. சோகமாய் இறங்க ஆயத்தமான போது "பிரியாணி இப்பத்தான் இறக்கினோம். வேணும்னா அங்க டேபிள்ல உக்காந்து சாப்பிடுறீங்களா? என்று பிரியாணி அண்டாவை திறக்க, அட்டகாசமான மசாலா வாசம் என்னை சூழ்ந்தது. சூடான, மிகச் சூடான் மட்டன் பிரியாணி. அட்டகாசமான கத்திரிக்க...