சாப்பாட்டுக்கடை - திருநெல்வேலி தோசைக்கடை
கொரோனாவால் இழந்த ஒரு பெரிய உணவு அனுபவம் எது என்றால் அது திருநெல்வேலி தோசைக்கடையின் எண்ணெய் தோசையைத்தான்.சாலிகிராமத்தில் பரணி ஸ்டூடியோ எதிரில் சின்னதாய் ஒரு கடை இருக்கும். அங்கே சாப்பிடவென ஒரு சிறு கூட்டம் எப்பவுமே இருக்கும். அது கொரோனா காலத்தில் இல்லாமல் போய் பின் திறந்து மெட்ரோ வேலைக்காக மூடி தற்போது மேப்படுத்தப்பட்ட விரகடுப்பில் அதே திருநெல்வேலி தோசைக்கடை. அப்படி ஒன்றும் பெரிய மெனு இருக்காது. தோசை, எண்ணெய் தோசை, அடை, வெங்காய தோசை, பொடி தோசை.மசால் வடை அம்புட்டுத்தான். எண்ணெய் தோசையில் ஆரம்பிப்போம். விரகடுப்பில் போடப்பட்ட கல்லில் தோசை மாவு ஊற்றப்பட்டு, அது நமக்கு பரிமாறுகையில் நல்லெண்ணெய் மினுமினுப்போடு, மேலே ஒரு கரண்டி கெட்டி தேங்காய் சட்னியோடு பரிமாறுவார்கள். எண்ணெய் தோசையின் டேஸ்ட் நிச்சயம் நீங்கள் இதற்கு முன்னால் ஹோட்டல்களில் தோசை சாப்பிட்டிருந்தீர்களானால் அது இதற்கு முன் கிட்டே கூட நிற்க முடியாது. வீட்டில் கூட இப்படியான தோசைகள் தற்போது கிடைப்பதில்லை என்று ரெடிமேட் தோசை மாவு குடும்பங்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதிகம் முறுகல் இல்லாத, ஆனால் அதே நேரத்தில் நடுவில் லேசான ...