Posts

Showing posts from 2024

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

  3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும் மணி வடைகடையில் வடை எப்போதுமே சூடாய் போடப் போட காலியாகிக் கொண்டேயிருக்கும். நானும் எனது நண்பர்களும் எப்போதும் அங்கே மாலை வேளையில் வடை சாப்பிட போய்விடுவோம். அப்படியான ஒரு மாலை வேளையில் வடை சாப்பிட்டுவிட்டு கிளம்பிய போது இரண்டு சிறுவர்கள் அல்லது பையன்கள் என்று கூட சொல்லலாம். கிட்டத்தட்ட ஆவிச்சி ஸ்கூல் திருப்பத்திலிருந்து ஓடி வந்தார்கள்.  எங்களைப் பார்த்ததும் என்ன தோன்றியதோ இரண்டு பையன்களும் நின்றுவிட்டு, அதில் சிகப்பாய் சேட்டுப் பையன் போல இருந்தவன் “சார்.. இவருக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறீங்களா?”  என்று பக்கத்திலிருந்த டிபிக்கல் பிகாரி லுக்கில் இருந்த பையனை காட்டி நல்ல தமிழில் பேச ஆரம்பித்தான். “என்ன தம்பி என்ன பிரச்சனை?” “சார். ஆவீச்சி பஸ் ஸ்டாண்டுல இறங்குனேன் அப்ப இவரை சுத்தி ரெண்டு மூணு அரவாணிங்க நின்னுட்டு இருந்தாங்க. பேசிட்டி இருக்கும் போதே அவரோட பர்ஸுலேர்ந்து பத்தாயிரம் ரூபா எடுத்துட்டாங்க. நான் அதைப் பார்த்ததும் என்னான்னு கேக்கப் போனப்ப என்னோட செல்ல புடுங்க வந்தாங்க. இவரோட செல்லையும் புடுங்க பின்னாடி துறத்துனாங்க. அதான் ஓடி...

சாப்பாட்டுக்கடை - மெட்ராஸ் பாயா ஹவுஸ்.

Image
இந்த பேரை நண்பர் குசும்பன் போய் சாப்பிட்டு எழுதிய போதுதான் தெரிந்தது. கடை ஆரம்பித்து ரெண்டாவது நாளில் எழுதியிருந்தார். வழக்கமாய் பாயா சாப்பிட வேண்டுமென்றால் ஒரிரு இடங்களில் இருக்கிறது. பெரும்பாலும் அது மலையாளிகளின் ஓட்டல்களாய் இருக்கும். சரி ஒரு நடை போய்விட்டு வருவோம் என்று கிளம்பிப் போனோம். மெட்ராஸ் பாயா என்றதும் ஏதோ பெரிய கடை என்று எண்ணியது தவறு. அது மிகச் சிறிய பாஸ்ட் புட் அவுட்புட் போலத்தான் இருந்தது.  இட்லி, இடியாப்பம் காம்போக்கள் நிறைய இருந்தது. இடியாப்பம் பாயா ஆர்டர் செய்தோ. பாயா சூடாய் இருந்தது. வழக்கமான பாயாவின் டேஸ்டை விட கொஞ்சம் வித்யாசமாய் இருந்தது. காரம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. நன்கு வெந்த கால்களின் மஜ்ஜையோடு பெயரைக் காப்பாற்றும் விதமாகவே இருந்தது. இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகிறது என்று குறித்துக் கொண்டேன். அடுத்ததாய் மட்டன் சுக்கா, இட்லி. மட்டன் சுக்கா பீஸ்கள் நன்கு வெந்து அட்டகாசமாய் இருந்தது. கூடவே கொஞ்சம் மீன் குழம்பும், சிக்கன் குழம்பும் ஊற்றி சாப்பிட்டு விட்டு வந்தோம். மீன் குழம்பு டிவைன். சிக்கன் குழம்பில் சின்ன கருத்தை சொல்லிவிட்டு வந்தோம்.  நான் வழக்கம...

ஒளியை காவு வாங்கப் போகும் ஒலி

  சினிமாவைப் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதும், பார்க்கும் இளைஞ/ஞிகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் டேஞ்சரான ஒரு ஜெனரேஷன் சினிமாவை அணுகிக் கொண்டிருக்கிறது. அது சினிமாவை கேட்கும் இளைஞ/ஞிகள் கூட்டம். அதிலும் குறிப்பாய் பெண்கள். இவர்கள் படமே பார்ப்பதில்லை. ஆனாலும் பல ஆங்கில/உலக படக்கதைகளைப் பற்றி அவர்களுடன் பேசினால் அய்ய அது போர். இது ஓகே என்று எல்லாம் விமர்சனங்கள் கிடைக்கும். எப்ப பார்த்தே என்று கேட்டால்? யாரு பார்த்தாங்க கேட்டேன் என்கிறார்கள். எங்கேனு கேட்டதற்கான பதில் யூடியூபில் எந்த படமாக இருந்தாலும் அதன் டிரைலரை வைத்தோ? அல்லது அந்த படத்தின் புட்டேஜை வைத்தோ லைன் பை லைன் கதை சொல்கிறார்கள். மேக்சிமம் அரை மணி நேரத்தில் கதை சொல்லி விடுகிறார்கள். விடாமல தொடர்ந்து மூச்சு விடாமல் சொல்கிறார்கள். இதை கேட்டா நீ விமர்சனம் பண்ணுறே? என்று கேட்டதற்கு இந்த படத்துக்கு எல்லாம் இதுவே போதும் என்கிற விமர்சனமும் கிடைத்தது. இவர்களுக்கு பல படங்களின் பெயர்கள் நியாபகத்தில் இல்லவே இல்லை. குறிப்பாய் வெளிநாட்டுப் படங்கள். கதை சொல்லிகளின் சேனல்கள் எனக்கு தெரிந்து இருபதாவது லீடிங்கில் இருக்கிறது. ச...

கறி தோசையும் நானும்

  கறி தோசையும் நானும் எனக்கு கறி தோசை என்றால் மிகவும் பிடிக்கும். முதன் முதலில் நான் கறி தோசை சாப்பிட்டது மதுரை கோனார் மெஸ்ஸில். அதுவும் பழைய கடையில். ஒரு பள்ளமான இடத்தில் நின்றபடி மாஸ்டர் தன் இடுப்பளவுக்கு மேலான தோசைக்கல்லில் தோசை மாவை தூக்கி வீசிய லாவகத்தில் வட்டவட்டமாய் ஊற்றும் ஸ்டைலாகட்டும், முட்டையை உடைத்து அப்படியே ஒவ்வொரு தோசையின் மேல் கரெக்டாய் விழுந்த லாவகத்தை வாய்பிளந்து பார்த்தபடி ரெண்டு கறி தோசை ஆர்டர் செய்தோம். என்னைப் பொறுத்தவரை கறி தோசை என்பது அவ்வளவாய் புளிக்காத தோசை மாவில் கெட்டியாகவும் இல்லாமல், தளதளவெனவும் இல்லாமல் ஒரு மாதிரி தளுக்கான பதத்தோடு, முட்டையை எடுத்து ஊற்றி, அதில் நன்கு வெந்த கறித்துண்டுகளை மாவு கீழ் பக்கம் வெந்து கொண்டிருக்கும் போதே மேலே மாசாலாவோடு வைத்து அழுத்தி, நன்றாக எண்ணெய் விட்டு, கீழ் பக்கம் கருகாத பதத்தில் எடுத்தி அப்படியே ஒரு திருப்பு திருப்பி, இன்னும் நன்றாக எண்ணெய் விட்டு, கறி, விறகு அடுப்பு என்றால் சிறப்பு. அன் ஈவனான வெப்பத்தில் திருப்பிப் போட்ட தோசையில் உள்ள கறி மெல்ல வேக ஆரம்பித்து கிரிஸ்பியாய் மாறும் போது எடுத்து ஒரு திருப்பி திருப்ப...

Life Goes On

  இரண்டு நாள் முன்பு மாலை வேலை செம்ம டிராபிக். என் காரை நான் கிட்டத்தட்ட உருட்டிக் கொண்டு வந்தேன். பின்னால் இருந்து ஒரு பைக்காரன் ஹாரன் அடித்துக் கொண்டே வந்தான். ரியர் வியூ மிரரில் பார்த்தால் என்னை ஓவர் டேக் செய்யும் எண்ணத்துடன் ஒரு சைக்கிள் மட்டுமே போகக்கூடிய கேப்பில் பைக்கை வைத்து முன்னேற முயன்று கொண்டிருந்தான். நான் சைட் மிரர் வழியாய் பார்ப்பதை அவன் பார்த்துவிட்டு, ஏதோ கத்தினான். காரின் கண்ணாடி ஏற்றியிருந்த படியால் அவன் பேசியது கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அவன் கத்திக் கொண்டே என் வண்டியை அத்தனை கிடிக்கிப்பிடி டிராப்பிக்கில் இடது புறம் ஓவர் டேக் செய்து, ஜன்னல் பக்கம் நின்று “ஒத்தா.. வழிவிட மாட்டியா? கொன்றுவேன்” என்றான். முகம் முழுவதும் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. வெய்யில் வேறு மனிதன் கோபமாய் ஆவதற்கு ஏற்றார்ப் போல இருக்க, பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தேன். “ஒத்தா நிறுத்துடா.. வண்டிய.. நிறுத்துடான்னா” என்று கத்தினான். நான் பொறுமையாய் இரு வர்றேன் என்பத் போல வலது புறம் இருந்த பெட்ரோல் பங்கின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, காரை விட்டு இறங்கினேன். எங்கே அவன் என்று அவனைப் பார்த்தால்...

Feminist -Review

  பெமினிஸ்ட் வெப் சீரியஸின் ஒரு எபிசோட் திரையிடப்பட்டது.. மிக சிறப்பாக இருந்தது.. இயக்குனராகவும் கேபிள் சங்கர் சார் மிகப்பெரிய உயரம் தொடுவார்.. Ra Venkat

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

ஒரு காலத்தில் ட்ராவல் செய்யப் போகிறோம் என்றாலே வீட்டிலிருந்து தூக்குசட்டியில் உணவு எடுத்துப் போன காலம் உண்டு. கடந்த இருபது வருடங்களில் ஹைவே உணவங்கள் மிக பிரபலமாக, பல உணவகங்கல் நல்ல தரத்துடன் இருக்க, பயணங்களில் உணவு ஒரு பெரிய பிரச்சனையாகவே இல்லாமல் போனது. பயணங்களில் வெஜ் உணவுதான் சேஃப் என்ற ஒரு எண்ணத்தை ஒரு சில உணவங்கள் மாற்ற ஆரம்பித்தது. அப்படியான ஒரு உணவகம் தான் இந்த டி.கே மாப்பிள்ளை மெஸ். இனி நாம் நல்ல நல்ல நான் -வெஜ் உணவுக்காக 99-100 கி.மிட்டர் எல்லாம் பயணப்பட தேவையில்லை. சென்னையிலிருந்து திருச்சி ரோட்டில் சரியாய் 77வது கி.மீட்டரில் இந்த உணவகம் அமைந்திருக்கிறது.  நல்ல இண்டீரியருடன் ஏசி உணவகம். உள்ளே நுழைந்ததும் அவர்கள் போட்டிருந்த அறிவுப்பு போர்ட்டே ஆர்வத்தை ஏற்படுத்தியது.அஜினோமோட்டோ என்கிற சேர்க்கையே அவர்களின் உணவுகளில் கிடையாது என்றிருந்தார்கள். அதே போல பார்ப்பிக்யூ உணவுகளை சமைப்பதற்கு சல்பர் சார்க்கோல் உபயோகிக்காமல் சமைக்கிறோம். எல்லா உணவுகளை அவர்கள் செக்கில் ஆட்டிய எண்ணையில் தான் சமைக்கிறார்கள் என்று அறிவித்திருந்தார்கள். சாப்பிட வருகிறவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம...

டெலிவரி ஆஃபுகள் வரமா? சாபமா?

  டெலிவரி ஆஃபுகள் வரமா ? சாபமா ? சமீபத்தில் கும்பகோணத்திற்கு போயிருந்த போது சுவிக்கி டி சர்ட் போட்ட இளைஞர்களை ஆங்காங்கே பார்க்க முடிந்தது . அட இங்கேயும் வந்துட்டிங்களா மஹாப்பிரபு ?  என்று ஆச்சர்யப்பட ஏதுமில்லை . காரணம் லாஜிஸ்டிக் பிஸினெஸ் போல லாபம் வரும் தொழில் இல்லையென்றே சொல்ல வேண்டும் . ஆனால் அதற்கு சரியான எக்ஸிக்யூஷனும் , செயல் திறன் கொண்ட பின்னணியும் அமைய பெற்றிருக்க வேண்டும் . ஆன்லைன் உணவு டெலிவரி வியாபாரம் 2022 ஆம் ஆண்டின் கணக்குபடி 581.86 பில்லியன் ரூபாய்கள் என்றும் வருகிற 2028 க்குள் 3059.25 பில்லியன் வரை போகும் என்கிறார்கள் . இதில் உணவு டெலிவரி ஆப்களின் தொழில் வகைகளில் இரண்டு வகை உண்டு . ஒன்று எல்லா உணவகங்களையும் ஒன்றினைத்து அதன் மூலம் ஆர்டர்களை அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பி அவர்களைக் கொண்டே டெலிவரி செய்வது . இன்னொன்று ஆர்டர்களை தங்களது நிறுவன ஆட்கள் மூலம் பெற்று டெலிவரி செய்வது . இதில் இரண்டாவது வகைத்தான் இன்றைய பெரும் பிஸினெஸ் . உணவு டெலிவரி ஒரு காலத்தில் பிட்சா கடைக்க...