சாப்பாட்டுக்கடை- Tiffin Shashtra Anna nagar
காபி ஷாஷ்த்ரா என்கிற கடையை ஆங்காங்கே பார்த்திருப்பீர்கள். நல்ல அட்டகாசமான காபி, ஸ்நாக்ஸ், டீ போன்றவை கிடைக்கும். என்ன கொஞ்சம் காஸ்ட்லியாய் இருக்கும். பட் தரம் நன்றாக இருப்பதால் நல்ல கூட்டமும் இருக்கும். அவர்கள் காபி ஷாஷ்த்ராவை டிபன் ஷாஷ்த்ராவாக மாற்றியிருக்கிறார்கள். அண்ணாநகரில் மட்டுமே. ஏகப்பட்ட கூட்டம். உபவிஹாரை விட அதிகமாய் இருந்தது. அதென்ன மாயமோ தெரியவில்லை. சமீபகாலமாய் தமிழகம் எங்கும் கர்நாடக ஸ்டைல் வெஜ் உணவுகள் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. கோவையில் சோஷியல் கிச்சன் என்று ஒன்று ஆரம்பித்திருக்கிறார்கள். பெங்களூர் ராமேஸ்வரம் கபே ஹைதராபாத்தில் ஒரு பெரிய கிளை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் கார சாரமாய் சாப்பிடும் ஆந்திராக்காரர்கள் எப்படி தித்திப்பான சாம்பாரை சாப்பிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. சென்னையில் ஏற்கனவே ஈட்டிங் சர்கிள், உபவிஹார் போன்ற கடைகளில் நம்மூர் சாம்பாரை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சரி.. டிபன் ஷாஷ்த்ராவுக்கு வருவோம். இவர்களும் கர்நாடக ஸ்டைல் வெஜ் உணவுதான். பென்னே தோசை. ஓப்பன் மசாலா பென்னே தோசை, கார பாத், செளசெள பாத், இட்லி, தட்டே இட்ல...