காபி ஷாஷ்த்ரா என்கிற கடையை ஆங்காங்கே பார்த்திருப்பீர்கள். நல்ல அட்டகாசமான காபி, ஸ்நாக்ஸ், டீ போன்றவை கிடைக்கும். என்ன கொஞ்சம் காஸ்ட்லியாய் இருக்கும். பட் தரம் நன்றாக இருப்பதால் நல்ல கூட்டமும் இருக்கும். அவர்கள் காபி ஷாஷ்த்ராவை டிபன் ஷாஷ்த்ராவாக மாற்றியிருக்கிறார்கள். அண்ணாநகரில் மட்டுமே.
ஏகப்பட்ட கூட்டம். உபவிஹாரை விட அதிகமாய் இருந்தது. அதென்ன மாயமோ தெரியவில்லை. சமீபகாலமாய் தமிழகம் எங்கும் கர்நாடக ஸ்டைல் வெஜ் உணவுகள் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. கோவையில் சோஷியல் கிச்சன் என்று ஒன்று ஆரம்பித்திருக்கிறார்கள். பெங்களூர் ராமேஸ்வரம் கபே ஹைதராபாத்தில் ஒரு பெரிய கிளை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் கார சாரமாய் சாப்பிடும் ஆந்திராக்காரர்கள் எப்படி தித்திப்பான சாம்பாரை சாப்பிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. சென்னையில் ஏற்கனவே ஈட்டிங் சர்கிள், உபவிஹார் போன்ற கடைகளில் நம்மூர் சாம்பாரை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சரி.. டிபன் ஷாஷ்த்ராவுக்கு வருவோம். இவர்களும் கர்நாடக ஸ்டைல் வெஜ் உணவுதான்.
பென்னே தோசை. ஓப்பன் மசாலா பென்னே தோசை, கார பாத், செளசெள பாத், இட்லி, தட்டே இட்லி, வடை, ராவா தோசை போன்ற லிமிடெட் அயிட்டங்கள் தான். கூட்டம் அத்தனை அள்ளும். முக்கியமாய் பென்னே தோசை ஆஸ் யூஸ்வலான கர்நாடக பதத்தில் வரும் தோசை தான். உருக்கிய வெண்ணெயைத்தான் ஊற்றுகிறார்கள். ஓப்பன் மசாலாவில் அவர்கள் கொடுக்கும் மசாலா அதிக வெங்காயத்தோடு கொஞ்சம் காரம் தூக்கலாய் செம்மையாய் இருக்கிறது. மற்ற கடைகளில் ஸ்மாஸ்ட் பொட்டேட்டோவாக இருக்கும். காரம் குணம் குறைவாகவே இருக்கும்.
இவர்களது சாம்பார் இனிப்பாக இருந்தாலும் சுவை கொஞ்சம் டிபரண்ட் தான். ஆஸ்யூஷுவல் சாம்பாரோடு தரும் சட்னி. தோசை மசாலாவுக்கு பிறகு எனக்கு பிடித்தது இவர்களது கார பாத். வழக்கமாய் கார பாத் என்றால் ரவா உப்புமாவைத்தான் தருவார்கள் என்றாலும் அதில் சுவை வித்யாசமாய் இருக்கும் ஆனால் ப்ளெண்டாகத்தான் இருக்கும். இவர்கள் கொஞ்சம் காரம் போட்டு தருகிறார்கள் பேருக்கு ஏற்றார்ப் போல கார பாத். சிம்பிள் டிபன். நல்ல தரம். உபவிஹார் போல ரொம்ப நேரம் காக்க வைக்காமல் இங்கே பில் போட்டதும் அதே பில் K.O.T யாய் உள்ளே சென்று விட அடுத்தடுத்த ஆர்டர்கள் உடனடியாய் கொடுக்கப்பட்டாலும் கொஞ்சம் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. உபவிஹார் போல இல்லை. குறைந்த விலையில் நிறைந்த கர்நாடக டிபன் சாப்பிட, உபவிஹாருடன் இப்போது டிபன் ஷாஷ்த்ராவும் சேர்ந்திருக்கிறது.
Post a Comment
No comments:
Post a Comment