சாப்பாட்டுக்கடை - பசும்பொன்

இந்த பெயரில் ஒரு க்ளவுட் கிச்சனை ஏற்கனவே ஆன்லைனில் பார்த்திருக்கிறேன். நண்பர் கார்த்திகேயன் வந்து பாருங்க என்று கூப்பிட்ட போது கடையின் பெயர் பசும்பொன் என்றிருக்க, அதே தான் இப்ப ரெஸ்ட்டாரண்டாய் மாற்றியிருக்கிறோம் என்று சொன்னார். நல்ல ஆம்பியன்ஸோடு இருந்தது உணவகம். ஸ்டார்ட்டரா என்னன்னா வச்சிருக்கீங்க? என்று கேட்ட மாத்திரத்தில் ஒரு பெரிய லிஸ்டைச் சொன்னார். காரப் பொடி சிக்கன், பச்சை மிளகாய் சிக்கன், நெய் சிக்கன், தொடைக்கறி போண்டா, மட்டன் நல்லி எலும்பு ரோஸ்ட், நெய் மட்டன் என வரிசைக்கட்ட, நண்பர்கள் நான்கைந்து பேரோடு போனதால் எல்லாத்துலேயும் ஒண்ணொண்ணு என்று ஆர்டர் செய்தோம். காரப் பொடி சிக்கன் முதலில் வந்தது. நன்கு வெந்த போன்லெஸ் சிக்கனை லேசாய் வறுத்தெடுத்து, அதில் மசாலாவைப் போட்டு, அதில் காரப் பொடியை மேலே தூவி கலந்து தருகிறார்கள். முதல் பீஸை வாயில் வைத்த மாத்திரத்தில் கிட்டத்தட்ட கரைந்தது என்றே சொல்ல வேண்டும். மேலே தூவப்பட்ட முந்திரி, திகட்டாத மசாலா, அதில் தூவப்பட்டிருக்கும் லேசான நரநர காரப் பொடி எல்லாம் சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கும் சுவையே அலாதி. அட்டகாசமாய் இருந்தது. மு...