Posts

Showing posts from April, 2024

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

ஒரு காலத்தில் ட்ராவல் செய்யப் போகிறோம் என்றாலே வீட்டிலிருந்து தூக்குசட்டியில் உணவு எடுத்துப் போன காலம் உண்டு. கடந்த இருபது வருடங்களில் ஹைவே உணவங்கள் மிக பிரபலமாக, பல உணவகங்கல் நல்ல தரத்துடன் இருக்க, பயணங்களில் உணவு ஒரு பெரிய பிரச்சனையாகவே இல்லாமல் போனது. பயணங்களில் வெஜ் உணவுதான் சேஃப் என்ற ஒரு எண்ணத்தை ஒரு சில உணவங்கள் மாற்ற ஆரம்பித்தது. அப்படியான ஒரு உணவகம் தான் இந்த டி.கே மாப்பிள்ளை மெஸ். இனி நாம் நல்ல நல்ல நான் -வெஜ் உணவுக்காக 99-100 கி.மிட்டர் எல்லாம் பயணப்பட தேவையில்லை. சென்னையிலிருந்து திருச்சி ரோட்டில் சரியாய் 77வது கி.மீட்டரில் இந்த உணவகம் அமைந்திருக்கிறது.  நல்ல இண்டீரியருடன் ஏசி உணவகம். உள்ளே நுழைந்ததும் அவர்கள் போட்டிருந்த அறிவுப்பு போர்ட்டே ஆர்வத்தை ஏற்படுத்தியது.அஜினோமோட்டோ என்கிற சேர்க்கையே அவர்களின் உணவுகளில் கிடையாது என்றிருந்தார்கள். அதே போல பார்ப்பிக்யூ உணவுகளை சமைப்பதற்கு சல்பர் சார்க்கோல் உபயோகிக்காமல் சமைக்கிறோம். எல்லா உணவுகளை அவர்கள் செக்கில் ஆட்டிய எண்ணையில் தான் சமைக்கிறார்கள் என்று அறிவித்திருந்தார்கள். சாப்பிட வருகிறவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம...

டெலிவரி ஆஃபுகள் வரமா? சாபமா?

  டெலிவரி ஆஃபுகள் வரமா ? சாபமா ? சமீபத்தில் கும்பகோணத்திற்கு போயிருந்த போது சுவிக்கி டி சர்ட் போட்ட இளைஞர்களை ஆங்காங்கே பார்க்க முடிந்தது . அட இங்கேயும் வந்துட்டிங்களா மஹாப்பிரபு ?  என்று ஆச்சர்யப்பட ஏதுமில்லை . காரணம் லாஜிஸ்டிக் பிஸினெஸ் போல லாபம் வரும் தொழில் இல்லையென்றே சொல்ல வேண்டும் . ஆனால் அதற்கு சரியான எக்ஸிக்யூஷனும் , செயல் திறன் கொண்ட பின்னணியும் அமைய பெற்றிருக்க வேண்டும் . ஆன்லைன் உணவு டெலிவரி வியாபாரம் 2022 ஆம் ஆண்டின் கணக்குபடி 581.86 பில்லியன் ரூபாய்கள் என்றும் வருகிற 2028 க்குள் 3059.25 பில்லியன் வரை போகும் என்கிறார்கள் . இதில் உணவு டெலிவரி ஆப்களின் தொழில் வகைகளில் இரண்டு வகை உண்டு . ஒன்று எல்லா உணவகங்களையும் ஒன்றினைத்து அதன் மூலம் ஆர்டர்களை அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பி அவர்களைக் கொண்டே டெலிவரி செய்வது . இன்னொன்று ஆர்டர்களை தங்களது நிறுவன ஆட்கள் மூலம் பெற்று டெலிவரி செய்வது . இதில் இரண்டாவது வகைத்தான் இன்றைய பெரும் பிஸினெஸ் . உணவு டெலிவரி ஒரு காலத்தில் பிட்சா கடைக்க...