கறி தோசையும் நானும்
கறி தோசையும் நானும் எனக்கு கறி தோசை என்றால் மிகவும் பிடிக்கும். முதன் முதலில் நான் கறி தோசை சாப்பிட்டது மதுரை கோனார் மெஸ்ஸில். அதுவும் பழைய கடையில். ஒரு பள்ளமான இடத்தில் நின்றபடி மாஸ்டர் தன் இடுப்பளவுக்கு மேலான தோசைக்கல்லில் தோசை மாவை தூக்கி வீசிய லாவகத்தில் வட்டவட்டமாய் ஊற்றும் ஸ்டைலாகட்டும், முட்டையை உடைத்து அப்படியே ஒவ்வொரு தோசையின் மேல் கரெக்டாய் விழுந்த லாவகத்தை வாய்பிளந்து பார்த்தபடி ரெண்டு கறி தோசை ஆர்டர் செய்தோம். என்னைப் பொறுத்தவரை கறி தோசை என்பது அவ்வளவாய் புளிக்காத தோசை மாவில் கெட்டியாகவும் இல்லாமல், தளதளவெனவும் இல்லாமல் ஒரு மாதிரி தளுக்கான பதத்தோடு, முட்டையை எடுத்து ஊற்றி, அதில் நன்கு வெந்த கறித்துண்டுகளை மாவு கீழ் பக்கம் வெந்து கொண்டிருக்கும் போதே மேலே மாசாலாவோடு வைத்து அழுத்தி, நன்றாக எண்ணெய் விட்டு, கீழ் பக்கம் கருகாத பதத்தில் எடுத்தி அப்படியே ஒரு திருப்பு திருப்பி, இன்னும் நன்றாக எண்ணெய் விட்டு, கறி, விறகு அடுப்பு என்றால் சிறப்பு. அன் ஈவனான வெப்பத்தில் திருப்பிப் போட்ட தோசையில் உள்ள கறி மெல்ல வேக ஆரம்பித்து கிரிஸ்பியாய் மாறும் போது எடுத்து ஒரு திருப்பி திருப்ப...