இரண்டு நாள் முன்பு மாலை வேலை செம்ம டிராபிக். என் காரை நான் கிட்டத்தட்ட உருட்டிக் கொண்டு வந்தேன். பின்னால் இருந்து ஒரு பைக்காரன் ஹாரன் அடித்துக் கொண்டே வந்தான். ரியர் வியூ மிரரில் பார்த்தால் என்னை ஓவர் டேக் செய்யும் எண்ணத்துடன் ஒரு சைக்கிள் மட்டுமே போகக்கூடிய கேப்பில் பைக்கை வைத்து முன்னேற முயன்று கொண்டிருந்தான். நான் சைட் மிரர் வழியாய் பார்ப்பதை அவன் பார்த்துவிட்டு, ஏதோ கத்தினான். காரின் கண்ணாடி ஏற்றியிருந்த படியால் அவன் பேசியது கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அவன் கத்திக் கொண்டே என் வண்டியை அத்தனை கிடிக்கிப்பிடி டிராப்பிக்கில் இடது புறம் ஓவர் டேக் செய்து, ஜன்னல் பக்கம் நின்று “ஒத்தா.. வழிவிட மாட்டியா? கொன்றுவேன்” என்றான். முகம் முழுவதும் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. வெய்யில் வேறு மனிதன் கோபமாய் ஆவதற்கு ஏற்றார்ப் போல இருக்க, பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தேன். “ஒத்தா நிறுத்துடா.. வண்டிய.. நிறுத்துடான்னா” என்று கத்தினான். நான் பொறுமையாய் இரு வர்றேன் என்பத் போல வலது புறம் இருந்த பெட்ரோல் பங்கின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, காரை விட்டு இறங்கினேன். எங்கே அவன் என்று அவனைப் பார்த்தால் பக்கத்து லேனிலிருந்து நான் இறங்குவேன் என்று எதிர்பார்க்காமல் இருந்தவன் இறங்கி பொறுமையாய் அவனைப் பார்த்து வா என்று கையசைத்ததைப் பார்த்து வண்டியை ராங் ரூட்டில் விட்டு திரும்பிப் பார்த்தபடி “ஒத்தா காலிபண்ணிருவேன்’ என்று இன்னும் ரெண்டு வண்டியை இடித்துவிட்டு ஓடினான். சில மனிதர்கள் இருக்கிறார்கள். நடந்து போகிறவன் எப்படி சைக்கிள் வைத்திருப்பவனைப் பார்த்து திட்டுவானோ அப்படி. உளவியல் பிரச்சனைதான். ஆனால் இப்படி திட்டுகிறவர்களை பெரும்பாலானோர் இறங்கி என்ன பாவம் என்று எதிர் கொள்வதில் பலபிரச்சனைகள் இருக்கிறது. அதற்கு பயத்து அவன் திட்டினாலும் கண்டு கொள்ளாமல் போய்விடுவார்கள். எனக்கு இவர்களை மிகவும் பிடிக்கும். அதனால் பெரும்பாலும் அவர்களை எதிர் கொள்ள எப்போதும் தயாராய் இருப்பேன். இதை இவர்கள் எதிர்பார்ப்பதில்லை. என்னை அவாய்ட் செய்து வண்டியிலேயே ராங் ரூட்டில் ஓடியவனைப் பார்த்து ஒரு டிவிஎஸ் ஃபிப்டி காரன் “த்த.. சாவுகிராக்கி “ என்று திட்டினான். #lifegoeson
Post a Comment
No comments:
Post a Comment