சாப்பாட்டுக்கடை - மெட்ராஸ் பாயா ஹவுஸ்.

இந்த பேரை நண்பர் குசும்பன் போய் சாப்பிட்டு எழுதிய போதுதான் தெரிந்தது. கடை ஆரம்பித்து ரெண்டாவது நாளில் எழுதியிருந்தார். வழக்கமாய் பாயா சாப்பிட வேண்டுமென்றால் ஒரிரு இடங்களில் இருக்கிறது. பெரும்பாலும் அது மலையாளிகளின் ஓட்டல்களாய் இருக்கும். சரி ஒரு நடை போய்விட்டு வருவோம் என்று கிளம்பிப் போனோம். மெட்ராஸ் பாயா என்றதும் ஏதோ பெரிய கடை என்று எண்ணியது தவறு. அது மிகச் சிறிய பாஸ்ட் புட் அவுட்புட் போலத்தான் இருந்தது. இட்லி, இடியாப்பம் காம்போக்கள் நிறைய இருந்தது. இடியாப்பம் பாயா ஆர்டர் செய்தோ. பாயா சூடாய் இருந்தது. வழக்கமான பாயாவின் டேஸ்டை விட கொஞ்சம் வித்யாசமாய் இருந்தது. காரம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. நன்கு வெந்த கால்களின் மஜ்ஜையோடு பெயரைக் காப்பாற்றும் விதமாகவே இருந்தது. இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகிறது என்று குறித்துக் கொண்டேன். அடுத்ததாய் மட்டன் சுக்கா, இட்லி. மட்டன் சுக்கா பீஸ்கள் நன்கு வெந்து அட்டகாசமாய் இருந்தது. கூடவே கொஞ்சம் மீன் குழம்பும், சிக்கன் குழம்பும் ஊற்றி சாப்பிட்டு விட்டு வந்தோம். மீன் குழம்பு டிவைன். சிக்கன் குழம்பில் சின்ன கருத்தை சொல்லிவிட்டு வந்தோம். நான் வழக்கம...