இட்லி, இடியாப்பம் காம்போக்கள் நிறைய இருந்தது. இடியாப்பம் பாயா ஆர்டர் செய்தோ. பாயா சூடாய் இருந்தது. வழக்கமான பாயாவின் டேஸ்டை விட கொஞ்சம் வித்யாசமாய் இருந்தது. காரம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. நன்கு வெந்த கால்களின் மஜ்ஜையோடு பெயரைக் காப்பாற்றும் விதமாகவே இருந்தது. இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகிறது என்று குறித்துக் கொண்டேன். அடுத்ததாய் மட்டன் சுக்கா, இட்லி. மட்டன் சுக்கா பீஸ்கள் நன்கு வெந்து அட்டகாசமாய் இருந்தது. கூடவே கொஞ்சம் மீன் குழம்பும், சிக்கன் குழம்பும் ஊற்றி சாப்பிட்டு விட்டு வந்தோம். மீன் குழம்பு டிவைன். சிக்கன் குழம்பில் சின்ன கருத்தை சொல்லிவிட்டு வந்தோம்.
நான் வழக்கமாய் ஒரு கடையில் சாப்பிட்டால் உடனே வேற லெவல் கடை என்றெல்லாம் எழுத மாட்டேன். குறைந்த பட்சம் மூன்று மாதங்களில் நான்கைந்து முறையாவது போய்விட்டுத்தான் எழுதுவேன். அப்படி போகத் தூண்டிய கடைகள் மிகக் குறைவு. ஆனால் ஏனோ இந்த மெட்ராஸ் பாயா ஹவுஸுக்கு இரவு நேரங்களில் கொஞ்சம் தூரம் என்றாலும் போய் விட்டு வரலாம் எனும் எண்ணம் அவர்கள் கொடுத்த உணவின் ருசி மூளையிலிருந்து கிளப்பியது தான் காரணம். இன்னொரு முக்கிய காரணம் பர்ஸுக்கு பழுதில்லாத விலை.
இம்முறை தோசை கல் எல்லாம் போட்டிருந்தார்கள். வழக்கம் போல இடியாப்பம் பாயா, தோசை சிக்கன் ஃப்ரை, கொஞ்சம் மீன் குழம்பு, சிக்கன் சுக்காவோடு அன்றைய உணவு முடிந்தது. தோசைக்கும் சிக்கன் சுக்காவுக்கும் செம்ம காம்பினேஷன். குடல் ஆர்டர் செய்திருந்தோம். டேஸ்டுக்கு கொஞ்சம் கொடுங்க என்று வாங்கி சாப்பிட்டுவிட்டுத்தான் ஆர்டர் செய்தோம். பெருமாலான இடங்களில் சரியாய் சுத்தம் செய்யாத குடல் தான் கிடைக்கும். இங்கே நன்கு வெந்த குடல், சரியான அளவு மசாலா. அளவான காரத்தோடு மிக அருமையாய் இருந்தது. இரவு நேரங்களில் குழம்பு மீன் சாப்பிட எனக்கு அவ்வளவாய் பிடிக்காது எனவே குழம்பு மட்டுமே மீண்டும் பாயா ஹவுசில் மீன் குழம்பும், மட்டன் சுக்காவும், பாயா என வரிசைக்கிரமாய் லிஸ்டில் டாப் 3யில் வந்து நின்றது.
இதற்கு இவர்களின் கடையின் புதிய ப்ராஞ்ச் மற்றும் மதிய உணவை ஆரம்பித்திருந்தார்கள் அதுவும் நல்ல காம்பினேஷனோடு. மட்டன், சிக்கன், மீன் சைட்டிஷ்ஷுகளுடன் நெய் சோறு. அல்லது சாதம் எல்லாமே 200 ரூபாய்க்குள். நெய் சோறு சீரக சம்பா அரிசியில் நெய்யும், சீரக சம்பா அரிசியின் மணத்துடன், சிம்பிளான மசாலா மிக்ஸிங்குடன் மட்டன் குழம்புடன் அட்டகாசமாய் இருந்தது. குறிப்பாய் மட்டன் பீஸ் நன்கு வெந்து திக்கான கிரேவியுடன் இருக்க, கொஞ்சம் சாதத்துடன் கலந்து சாப்பிட்ட போது நிஜமாகவே வேற வெலவில் இருந்தது. அதே தரத்துடன் சிக்கன் குழம்பும் இவர்களின் மாலை நேரத்து குழம்பை விட மிக அருமையாய் இருந்தது. மீன்குழம்பு வழக்கம் போல அட்டகாசம்.கோலா உருண்டை ஆர்டர் செய்திருந்தோம். சூடாய் சாப்பிட்டு இருந்தால் இத்தனை நுணுக்கமாய் கவனித்து இருக்க முடியுமா? என்று தெரியவில்லை. டெலிவரியில் வாங்கி சாப்பிட்டதால் கிடைத்த ஃபீட் பேக் கொஞ்சம் மாவு அதிகமாய் இருப்பதாய் பட்டது. ஆனால் அதே நேரத்தில் உள்ளே அரைத்த பீஸுகள் இல்லாமல் இல்லை. சிக்கன் 65 போன்லெஸ் இன்னொரு தரமான சைட். கொஞ்சம் ஆறினாலும் வேலையைக் காட்டிவிடும் சிக்கன் 65 நன்கு மேரினேட் செய்யப்பட்டிருந்த காரணத்தினால் டெலிவரியிலும் சிறப்பாய் இருந்தது.
இவர்களின் வெஜ் காம்போவைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நாப் வெஜ் கடைகளிiல் வெஜ் சிறப்பாய் இருந்ததாய் அத்தனை சிலாக்கியமான அனுபவம் எனக்கு இருந்ததில்லை. குறிப்பாய் நெய் சோறுடன் தரும் வெஜ் குருமா. மாலை வேளையில் இவர்களின் வெஜ் ஸ்டூவுடன் இடியாப்பம் சாப்பிட்டிருக்கிறேன். அதையே கொஞ்ச கெட்டியாக கொடுத்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். பட். இல்லை. அட்டகாசமான தேங்காய் அரைத்துப் போட்ட குருமா. அதிக காரமில்லாத அதே நேரத்தில் அதிக மசாலா இல்லாமல் காய்கறிகளுடனான குருமா. செம்மையாய் இருந்தது. அடுத்த சாதத்துடன் சாப்பிட, சாம்பார், ஒரு பொரியல், ரசம், வத்தக்குழம்பு காம்பினேஷன் வாங்கியிருந்தோம். சாம்பார் அத்தனை சிலாக்கியமாய் இல்லை. ஆனால் அந்த வத்தகுழம்பிருக்கே வத்தக்குழம்பு.. வாவ்.. வாவ். சரியான காரம், மற்றும் புளீப்புடனான காம்பினேஷன் அடிபொலி. அதே போல ரசமும். வழக்கமாய் இம்மாதிரியான வெஜ் காம்பினேஷனில் தரும் பீட்ரூட். அல்லது கோவைக்காய் பொரியல் இல்லாமல் பீன்ஸு பொரியல் அனுப்பியிருந்தார்கள். மிகச் சிறப்பு.
இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் செய்ய வேண்டிய அயிட்டங்களாய் சிக்கன் குருமா, சாம்பார், மட்டன் கோலா உருண்டை போன்றவைகள் சில லிஸ்டில் இருக்கிறது. வழக்கமாய் சாப்பிட்டு ரிவ்யூ சொல்லிவிட்டு வந்தால் சரி பண்ணிடலாம் என்று வாய் வார்த்தையாய் சொல்லி பார்த்திருக்கிறேன். இவர்கள் அதை ஜெனியூனாக எடுத்துக் கொண்டு சரி செய்ய முயல்கிறார்கள்.
இப்போது இவர்கள் இரண்டு இடங்களில் கடை நடத்துகிறார்கள். விரைவில் திநகரிலும் ஆரம்பிக்கப் போவதாய் சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் ஒரு முறை சுவைத்துப் பார்த்து சொல்லுங்கள். வயிற்றுக்கும் பர்சுக்கும் இதமான உணவகம்.
Mandaveli Branch 62/76, Bharathi Nagar South Canal Bank Rd Guindy Branch 40 Sardar Patel Road
கேபிள் சங்கர்.
29-07-2024
Post a Comment
No comments:
Post a Comment