Posts

Showing posts from November, 2024

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

  3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும் மணி வடைகடையில் வடை எப்போதுமே சூடாய் போடப் போட காலியாகிக் கொண்டேயிருக்கும். நானும் எனது நண்பர்களும் எப்போதும் அங்கே மாலை வேளையில் வடை சாப்பிட போய்விடுவோம். அப்படியான ஒரு மாலை வேளையில் வடை சாப்பிட்டுவிட்டு கிளம்பிய போது இரண்டு சிறுவர்கள் அல்லது பையன்கள் என்று கூட சொல்லலாம். கிட்டத்தட்ட ஆவிச்சி ஸ்கூல் திருப்பத்திலிருந்து ஓடி வந்தார்கள்.  எங்களைப் பார்த்ததும் என்ன தோன்றியதோ இரண்டு பையன்களும் நின்றுவிட்டு, அதில் சிகப்பாய் சேட்டுப் பையன் போல இருந்தவன் “சார்.. இவருக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறீங்களா?”  என்று பக்கத்திலிருந்த டிபிக்கல் பிகாரி லுக்கில் இருந்த பையனை காட்டி நல்ல தமிழில் பேச ஆரம்பித்தான். “என்ன தம்பி என்ன பிரச்சனை?” “சார். ஆவீச்சி பஸ் ஸ்டாண்டுல இறங்குனேன் அப்ப இவரை சுத்தி ரெண்டு மூணு அரவாணிங்க நின்னுட்டு இருந்தாங்க. பேசிட்டி இருக்கும் போதே அவரோட பர்ஸுலேர்ந்து பத்தாயிரம் ரூபா எடுத்துட்டாங்க. நான் அதைப் பார்த்ததும் என்னான்னு கேக்கப் போனப்ப என்னோட செல்ல புடுங்க வந்தாங்க. இவரோட செல்லையும் புடுங்க பின்னாடி துறத்துனாங்க. அதான் ஓடி...