சாப்பாட்டுக்கடை- சென்னையின் பெஸ்ட் அத்தோ- பீச் லேன்

 வட சென்னை ஏரியா தான் அத்தோவுக்கு பெஸ்ட் என்றே நான் சொல்வேன். இண்டீரியர் வட சென்னைக்கு சென்றால் இன்னும் கூட நல்ல அத்தோ கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது இந்தக் கடை சென்னை பாரீஸ் கார்னர் பர்மா பஜார் பீச் லைன் ரோட்டில் போஸ்ட் ஆபீஸுக்கு பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு தெருக்கடைதான் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இருப்பார்கள். இவர்களது ஸ்பெஷல் வெஜ் அத்தோ. அட்டகாசமான சுவையில் பைஜோவெல்லாம் போட்டுத்தருவார்கள். இவர்களது வாழத்தண்டு சூப்போடு அத்தோவை சாப்பிட்டால் போதும் வயிறும் மனசும் நிறைந்துவிடும் இவர்களது நான் வெஜ் சிக்கன் ப்ரைட் அத்தோ எனக்கு அத்தனை உவப்பல்ல. பட் அது பிடித்து சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். எப்போது போனாலும் ஒரு அத்தோ நான்கு முட்டை என சாப்பிடாமல் வந்ததில்லை.

முட்டை எல்லா இடத்தில் இதே சுவை இருப்பதில்லை சரியாக வெந்த முட்டையை நறுக்கி, அதன் இடையில் பொரித்த வெங்காயம் மற்றும் மசாலா எண்ணையை ஊற்றி மேல் கொஞ்சம் கொத்து மல்லி எல்லாம் தூவி தருவார்கள். ஒரு வாயில் அதை லப்பக்க வேண்டும் அப்போதுதான் அந்த ஆயில், வெங்காயம் மற்றும் முட்டையின் சுவையோடு ஜெல் ஆகும். உண்மையாகவே டிவைன் அனுபவம்.

இப்போது புதிதாய் ஃப்ரைட் சிக்கன் ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல போன்லெஸ் துண்டுகளை மசாலாவில் ஊற வைத்து, பின்பு பொரிக்கும் முன் அதை ப்ரெட் தூள்களை போட்டு உருட்டி, அதை பொரித்து தருகிறார்கள். சிகக்ன் மசாலாவோடு நன்கு ஊறவைக்கப் பட்டிருததால் ஜூஸியாய் இருந்தது. அதே நேரத்தில் நல்ல இஞ்சிப் பூண்டு அதிகம் போடப்பட்ட மசாலாவின் சுவையும் செம்ம. பார்த்து போய் சாப்பிட்டு சொல்லுங்க. 

கேபிள் சங்கர்

வீடியோ லிங்க்100 ரூபாய் அத்தோ/ப்ரைட் சிக்கன்

Comments

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.