சாப்பாட்டுக்கடை- அபு பாய் பிரியாணி- அண்ணாநகர்

கொஞ்சம் காஸ்டிலியான ஹைஃபை கடைகளுக்கு எப்படி காதர் நவாஸ்கான் ரோடு பிரபலமோ அப்படித்தான் சின்னபட்ஜெட் கடைகளுக்கு அண்ணாநகர் சாந்தி காலனி ஏரியா. ஆனால் இப்போது அண்ணாநகர் ஒரு புட் ஸ்டாப்பாகவே மாறிவிட்டது. ஏகப்பட்ட உணவுக்கடைகள் தெருவெங்கும் கடை விரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சின்னக் கடையாய், கிஸோக்குகளாய் ஆரம்பித்து இப்போது தனி கடையே போடுமளவுக்கு வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஓடிப் போனவர்களும் இருக்கிறார்கள். அப்படியான ஒரு பிரியாணிக்கடையாய்தான் இந்த அபு பாய் பிரியாணியை பார்த்தேன். குறிப்பாய் எந்த இன்ப்ளூயன்ஸர்களும் தினமும் அப்படியான பிரியாணி, இப்படியான பிரியாணி, வேற லெலல் என்று எல்லாம் அதிகம் கூவாத காரணத்தால் முதல் முறை சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டோம்.

என்னைப் பொறுத்தவரை பிரியாணியில் மட்டனைத் தவிர எது போட்டாலும் அது புவர் மேன்ஸ் பிரியாணிதான் என்பதால் நன்கு வெந்த பீஸுகளோடு நல்ல அளவோடு இருந்தது. அவர்களின் மசாலா தையல் இலையை விட பெட்டராகவே இருந்தது. சரி.. மட்டன் பிரியாணி என்னைக்கு போடுவீங்க? என்று கேட்டதற்கு வியாழன் என்றார்கள். சரி ஒரு வியாழன் அன்று கிளம்பிப் போனோம். நல்ல கூட்டம். மட்டன்பிரியாணி 280 ரூ என்றார்கள். சரி என ஒரு ப்ளேட் பில் வாங்கிக் கொண்டு போனோம். முதலில் ஒரு ப்ளேட்டில் மூன்று நன்கு வெந்த பீஸ்களோடு பிரியாணியை வாங்கியவுடன். முட்டை மசாலா வைத்தார்கள், அடுத்து கத்திரிக்கா கட்டா, வெங்காயப் பச்சடி, ஸ்வீட், என வரிசைக்கட்டி கொடுத்தார்கள்.

பிரியாணி அளவு சிக்கன் பிரியாணி அளவு இல்லை என்றாலும் நல்ல பிரியாணி அரிசியும் நன்கு வெந்த மட்டனோடு, அளவாய் கலந்த மசாலா மேலும் சுவையை கூட்டியது.  முட்டை மசாலா கொஞ்சம் வெங்காயம் அதிகமாய் இருந்ததால் தித்திப்பாய் இருந்தது. மற்ற படி சுவையான மட்டன் பிரியாணி இத்தனை அம்சங்களுடன் 280 ரூபாய்க்கு நல்ல டீல் என்றே சொல்ல வேண்டும். நீங்களும் ஒரு முறை ட்ரை செய்து பார்க்கலாம்.

கேபிள் சங்கர்
வீடியோ லிங்க். https://youtube.com/shorts/vw4icSSXNfo?feature=share

Comments

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.